குருவே துணை
விவேக சூடாமணி - கருத்துரை
- உயிர்ப்பிறவிகளில் மனிதப்பிறவி கிடைத்தற்கரியது. அதிலும் ஆணாகப் பிறத்தல் அரியது. அதையும் விடக் கற்றவனாதல் அரிது. அதற்கும் மேற்பட்டு கற்ற வேத தர்மப்படி வாழுதல் பெரிது. அதையும் விட வேதப்பொருளான கடவுளை உபாசிக்கும் வித்தைகளை உணர்தல் அரிது. இதையும் விட ஆத்மா எது? ஆத்மாவல்லாத பொருள்களெவை? என்ற விவேக ஞானம் பெரிது. இந்த ஆத்மாவே பிரும்மமாக உள்ளதை அனுபவப்பூர்வமாக் அறிந்த முக்தி நிலையே எல்லாவற்றிலும் பெரியது. இதைப் பல கோடிப்பிறவிகளில் செய்த புண்ணியமன்றி அடைய இயலாது
- 'எப்படியாவது (கடவுள் அருளாலோ, மகாபுருஷர் கருணையாலோ) மனிதப்பிறவி யடைந்தவர் ஆண்மையை (புலன்களை அடக்குவதில் தீரத்தை)யும் பெற்று வேதப் பொருளையும் அறிந்து தனது மோட்சத்தைப் பெறுவதற்காக எவன் முயலவில்லையோ அந்த முட்டாள் தற்கொலை செய்து கொண்டவனாவான். எப்படி என்றால், தானல்லாததைத் 'தான்' என்றெண்ணுவதால், பொய்யை ஏற்று, தானான உண்மையை இல்லாமற் செய்து கொள்ளுகின்றான்'
- அடைவதற்குக் கடினமான மனித உடலையும் ஆண் தன்மையையும்(வீர்யம்) அடைந்தும், எவன் தன் நோக்கத்தை அடைவதில் கவனத்தைச் செலுத்தவில்லையோ, அவனை விட முட்டாள் வேறு யார் இருக்கமுடியும்?